S Esuf Basha

S Esuf Basha

எஸ். யூசுப் பாஷா

Greetings! I am Esuf Basha, and I have been providing excellent service in the journalism field continuously for the past 15 years. Starting from Tamilan TV, I have worked in various news channels including Imayam TV, Malai Tamilagam newspaper, and Polimer Television, serving as a connecting bridge between the government and the people. I have been delivering authentic news to the public across all sectors including political personalities, medical injustices, people's rights, and corruption exposures. Today, I continue to serve as Chief Reporter at Vanakkam India organization.

Through the "Munnettrappathai" (Progress Path) charitable foundation for school students, I have conducted numerous awareness programs in collaboration with Tamil Nadu Police, including campaigns against violence against women, traffic awareness, the importance of breastfeeding, songs honoring the sacrifice of military personnel, and all other social awareness events.

With a desire to elevate the tailoring profession as a skilled craft, I collaborated with the Modern Tailors Artists Association to gather struggling tailors and reorganize them during the COVID-19 lockdown period when they had lost their normal livelihood, creating employment opportunities for many.

During the COVID-19 period, I ensured that hospital beds and oxygen cylinders were made available to even the most helpless common people, contributing to their peace of mind.

Services:
Educational assistance for underprivileged children.
Economic support for economically backward families.
Rescue and relief work during natural disasters.
Equal social service for all, regardless of religion, race, or language.

"We live for others" - My goal is to create small changes in everyone's life that lead to big transformations.

வணக்கம்! நான் யூசுப் பாஷா, கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத்துறையில் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்கி வருகிறேன். தமிழன் டிவியில் தொடங்கி, இமயம் டிவி, மாலை தமிழகம் நாளிதழ், பாலிமர் தொலைக்காட்சி என பல செய்தி சேனல்களில் பணியாற்றி இருக்கிறேன் அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறேன். அரசியல் பிரபலங்கள், மருத்துவ அநீதிகள், மக்களின் உரிமைகள், ஊழல் அம்பலங்கள் என அனைத்து துறையிலும் உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று வணக்கம் இந்தியா நிறுவனத்தில் முதன்மை செய்தி நிருபராக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

பள்ளி மாணவர்களுக்காக முன்னேற்றப்பாதை என்னும் அறக்கட்டளையின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு, தாய்ப்பால் மகத்துவம், இராணுவ வீரர்களின் தியாகத்தை உணர்த்தும் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தமிழக காவல்துறையுடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளேன்.

கைத்தொழிலாளான தையல் தொழிலை மேலே உயர்த்த விரும்பி, நவீன தையல் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் நலிந்த தையல் கலைஞர்களை திரட்டி கொரோனா ஊரடங்கு காலத்தில் இயல்பு நிலையை இழந்த அவர்களை மீண்டும் ஒழுங்குபடுத்தி பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறேன்.

கொரோனா காலத்தில் மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இவை அனைத்தையும் ஏதுமற்ற நின்ற பாமரனுக்கும் கிடைக்க வைத்து அவர்களின் மன நிம்மதியில் பங்கெடுத்து கொண்டேன்.

சேவைகள்:
ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவிகள்.
பொருளாதாரத்தில் பின்னோக்கிய குடும்பங்களுக்கு பொருளாதார ஆதரவுகள்.
இயற்கை பேரழிவுகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள்.
மத, இனம், மொழி பேதமின்றி அனைவருக்கும் சமமான சமூக சேவை

"நாம் வாழ்வது பிறருக்காக" ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சிறு மாற்றங்களை ஏற்படுத்தி, பெரிய மாற்றங்களை உருவாக்குவதே என் குறிக்கோள்.

Featured Video

சிறப்பு வீடியோ

Watch S Esuf Basha's journalistic work and social initiatives

Awards & Recognition

விருதுகள் & அங்கீகாரம்

Best Social Activist in Tamil Nadu

Best Social Activist in Tamil Nadu

NTKS Media Partnership

NTKS Media Partnership

Dream Kalam Partnership

Dream Kalam Partnership